பொன்னமராவதி அருகே மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற முப்பெரும் விழா!!
பொன்னமராவதி அருகே மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம்
மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏழாமாண்டு ஆண்டு விழா,விளையாட்டுப்போட்டி,புரவலர் சேர்க்கை என முப்பெரும் விழா நடைபெற்றது.மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர்கள் ராமதிலகம், இலாஹிஜான், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மீனாட்சி மணிகண்டன்,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மீனாட்சி,துணைத் தலைவர் மாலதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.வட்டார வள மேற்பார்வையாளர் (பொ) சிவக்குமார்,ஊராட்சி மன்றத்தலைவர் அடைக்கன், சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்து,ஒன்றியக்குழு உறுப்பினர் பழனியாண்டி அம்பலம்,ஒய்வு பெற்ற ஆசிரியர் கருத்தசாமி,ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சூர்யா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தலைமையாசிரியர் முத்துசாமி வரவேற்புரையாற்றினார். வனச்சரக அலுவலர் இராமநாதன், காரையூர் காவல் உதவி ஆய்வாளர் நதியா,காரையூர் வனவர் இந்துமதி, வனக்காப்பாளர் கனகவள்ளி,பட்டதாரி ஆசிரியர் தேன்மொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.பட்டதாரி ஆசிரியர் பூச்சி ஆண்டறிக்கையை வாசித்தார்.பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் முறையாக தொடங்கிய ஆண்டு விழாவில் பரத நாட்டியம், மாணவ, மாணவிகளின் நடனம், பாட்டு மன்றம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
விளையாட்டு போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பட்டதாரி ஆசிரியர் தேன்மொழி, இடைநிலை ஆசிரியர் சிவகாமி,ஆசிரியர் செல்வி.லதா,தற்காலிக ஆசிரியர் ஜெயஸ்ரீ ஆகியோர் தொகுத்து வழங்கினார்.நடன அமைப்புகளை இளந்தளிர் கலையகம் நடன ஆசிரியர் சுகன்யா சதிஷ்குமார் சிறப்பாக ஏற்பாடு செய்தார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக் குழுவினர்,சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள்,இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், தூய்மைப்பணியாளர்கள்,முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.