சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீப காலமாக சிறார் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிடும் சம்பவம் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
பாலியல் செயல்களில் ஈடுபடும் சிறார்களின் படங்கள் மற்றும் வீடியோக்களில் அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காட்சிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை இத்தகைய செயல்களின் எண்ணிக்கை 87 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலகளாவிய நடைமுறை கண்டறிந்துள்ளது.
சிங்கப்பூரில் 2020 ஆம் ஆண்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் நீதித் துறையின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
2020 ஆம் ஆண்டில் இது போன்ற ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. இருப்பினும், அவை 2022 இல் ஐந்தாகவும் 2023 இல் 7 ஆகவும் அதிகரித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் பல பேர் சிக்கியுள்ளனர்.சிங்கப்பூரில் கடந்த செப்டம்பரில் உள்துறை துணை அமைச்சர் சுன் ஷூலிங் கூறுகையில், 2020 முதல், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 140 வழக்குகளை போலீசார் விசாரணை நடத்தியதாக கூறி இருந்தார்.
சிறார்கள் பாலியல் செயல்களில் ஈடுபடுவதற்கு பெற்றோர் மற்றும் உறவினர்களும் உதவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 41 சதவீதத்தினர் பெற்றோரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவும், 42 சதவீதத்தினர் ஏனைய உறவினர்களால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
சிறார் பாலியல் துன்புறுத்தும் பதிவுகளை வைத்திருப்பது 2020 முதல் குற்றமாகும். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.