சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக பல மோசடி செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு மோசடி கும்பல் shopee இணைய தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி Whatsapp அல்லது Telegram மூலமாக முதலில் தகவல் அனுப்புவர்.
அதன்பின்,shopee இணைய தளத்தில் பிடித்த பொருட்களைக் குறிப்பிடும்படி கேட்பர்.
அதன்பிறகு ஒரு ஆய்வில் கலந்து கொண்டால் ஒரு சிறிய தொகை கொடுக்கப்படும் என்று கூறுவர்.
அதில் கலந்து கொண்டதும்,உதவியாளர் வேலைக்கு வரும்படி அழைப்பு வரும் என்று கூறுவர்.
முதலில் குறைவான தொகை வரும். அதன் கணக்கில் கூடுதலான பணம் போட்டால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறுவர். பிறகு,பணம் பறிக்கப்படும்.
அதனை காவல்துறையும்,Shopee Singapore நிறுவனமும் தெரிவித்தது.
கவனமாக இருக்கும்படி காவல்துறை கேட்டுக் கொண்டது.
46 பேர் மோசடிகாரர்களிடம் 750,000 வெள்ளிக்கு மேல் பறிகொடுத்திருக்கின்றனர்.