பரபரப்பு!! பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!!

பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!!

பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22 ஆம் தேதி காலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக 8 World செய்தி நிறுவனம் வெளியிட்டது.

இது குறித்து காவல்துறைக்கு காலை 8.30 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அந்த நபரின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை உறுதி செய்தது.

உயிரிழந்தவரின் வயது 47 இருக்கும் என்று காவல்துறை கூறியது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.