வேலையிடங்களில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க மனிதவள அமைச்சகத்தின் புதிய விதிமுறை!! தெரிந்து கொள்ளுங்கள்!!

வேலையிடங்களில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க மனிதவள அமைச்சகத்தின் புதிய விதிமுறை!! தெரிந்து கொள்ளுங்கள்!!

சிங்கப்பூரில் ஜூன் மாதம் முதல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அதிகபட்ச அபராதமாக $50,000 வெள்ளி விதிக்கப்படும்.

மேலும் குறைந்தபட்சம் $5 மில்லியன் ஒப்பந்த தொகை உள்ள கட்டுமானத் திட்டங்களுக்காகவும் ஓர் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

இத்தகைய கட்டுமான
தளங்களில் உயரமான இடங்களில் பணிபுரியும் போது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.

வேலையிடங்களில் ஏற்படும் மரணம், மோசமான காயங்கள் போன்ற விபத்துகள் நேரும் பொழுது கண்காணிப்பு கேமரா மூலம் அதற்கான காரணங்களை அறிய இயலும் என்று கருதப்படுகிறது.

இந்த புதிய விதிமுறை வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

இந்த புதிய விதிமுறைகளால் வேலையிட விபத்துகளை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வேலையிடப் பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 20,000 வெள்ளி அபராதம் விதிக்கும் நடைமுறை நடப்பில் உள்ளது. அது ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து உயர்த்தப்படுகிறது.