சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள கட்டாய புதிய விதிமுறை!!
சிங்கப்பூரில் 2020 மற்றும் 2024 க்கு இடையில் லாரி கிரேன்கள் கவிழும் நிகழ்வுகளின் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.கவிழ்ந்து விழுவது குறைக்க இயக்குனரை எச்சரிக்கும் SCS சாதனங்கள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என மனிதவள அமைச்சகம் கூறியது. அதனால் அது போன்ற நடக்கும் விபத்துகளை தடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் எனப்படும் இந்த சாதனம் ஒரு லாரி க்ரேனின் நிலைப்படுத்த, வரிசைப்படுத்துதல் மற்றும் நிலையற்றதாக இருந்தால் இயக்குனருக்கு எச்சரிக்கை வழங்கும்.
புதிய பாராந்தூக்கி லாரிகளில் அனைத்திலும் சாயமல் பாதுகாக்கக்கூடிய கட்டுப்பாட்டு சாதனம் கட்டாயமாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும் விதிமுறை 2025-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சாதனம் பொருத்தியிருந்தால் பாராந்தூக்கி தொடர்புடைய விபத்துகளில் 63 சதவீத சம்பவங்கள் நிகழாமல் தடுத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here