புதுப்பொலிவு பெறும் மண்டாய் வனவிலங்கு சரணாலயம்!!

புதுப்பொலிவு பெறும் மண்டாய் வனவிலங்கு சரணாலயம்!!

மண்டாய் வனவிலங்கு சரணாலயம் பல்வேறு வசதிகளுடன் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட உள்ளது.

இது சிங்கப்பூரின் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பூங்கா மேற்கு பகுதியில் திறக்கப்படும்.தென்கிழக்காசிய மற்றும் ஆப்பிரிக்க விலங்குகளை மக்கள் பார்ப்பதற்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படும்.

மழைக்காடுகளில் மக்கள் காடுகளைச் சுற்றி பார்க்கலாம். பூங்காவின் உயரமான இடங்களைப் பார்க்கலாம்.மேலும் நீரோடைகளை அவர்கள் கடக்க முடியும் என்று தெரிவித்தது.

இந்த ஆண்டு இறுதியில் சுமார் மூன்றரை நீளமுள்ள நடைபாதை திறக்கப்படும்.

சுமார் 220 மீட்டர் உள்ள குகை அமைக்கப்படும். அது சாரவாக்கின் முலு குகை போல் அமைக்கப்படும்.

மேலும் மக்கள் இரவில் தங்கி மகிழ சுமார் 24 மரவீடுகள் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனை பான்யன் குழு அமைத்து தர உள்ளதாக தெரிவித்தது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பார்வையாளர்களுக்காக 338 அறைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

220 மீட்டர் நீளமுள்ள குகையில் புதிய வகை உயிரனங்களையும் பார்க்கலாம்.