மனநலம் தொடர்பான பயிற்சியின் மூலம் மானியம்!!

மனநலம் தொடர்பான பயிற்சியின் மூலம் மானியம்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுமார் 1,30,000 பேருக்கு அடிப்படை மனநல ஆதரவுப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்தார்.

மனநலத் தேவைகள் உள்ளவர்களை அடையாளம் காணும் திறன் மற்றும் ஆரம்பகால தலையீடு போன்ற திறன்கள் இதில் அடங்கும்.

மனநல ஆதரவு பயிற்சியின் மூலம் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் அதிலிருந்து வெளிவந்து தீர்வு காண முடியும். மனநலம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு முழு தீர்வு காண்பதே இதன் நோக்கம்.

2030க்குள் அந்த எண்ணிக்கையை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதியோர்களைப் பராமரிப்பவர்கள் மற்றும் சிறப்புத் தேவை உள்ளவர்களும் இத்தகைய பயிற்சியைப் பெறலாம் என்று திரு ஓங் கூறினார்.

தகுதியான குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் மானியம் பெறலாம்.

பயிற்சிக்காக ஆண்டுக்கு 400 வெள்ளி மானியமாக வழங்கப்படலாம்.

இந்த தகவலை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.