இந்திய தலைநகர் புதுடெல்லியில் டிசம்பர் 13ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
2001 ஆம் ஆண்டு இதே நாளில் இந்த வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 22 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பிறகு நாடாளுமன்றம் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.
அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இரண்டு வாலிபர்கள் குதித்து அவையின் மையப்பகுதியை நோக்கி ஓடினர்.
அவர்களைப் பிடிக்க முயன்ற போது அவர்கள் மறைத்து வைத்திருந்த வண்ணப் புகைக் குண்டுகளை வீசினர்.
மேலும் அவர்கள் கோஷங்களை எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.
இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.