அமெரிக்காவில் McDonald's பர்கர் சாப்பிட்டவர் மரணம்!! சிங்கப்பூரில் McDonald's உணவகங்களில் E.Coli பாக்டீரியா இல்லை!!
அமெரிக்காவில் McDonald’s உணவகத்தில் பர்கரைச் சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்ததோடு பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள McDonald’s உணவகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
அங்கு உணவில் பயன்படுத்தப்பட்ட வெங்காயத்தால் E-Coli பாக்டீரியா பரவியதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள McDonald’s நிறுவனம் அங்குள்ள Taylor Farms நிறுவனத்திடமிருந்து வாங்கியதாக தெரிவித்தது.
வெங்காயங்கள் மீட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Taylor Farms நிறுவனத்திடமிருந்து உணவுப் பொருட்களை வாங்குவதை Burger King, KFC, Pizza hut ஆகிய நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.
சிங்கப்பூரில் செயல்படும் McDonald’s உணவகங்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை அந்நிறுவனம் CNA யிடம் கூறியுள்ளது.
இங்கு உணவுகளில் பயன்படுத்தப்படும் வெங்காயம் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள விநியோகஸ்தர்களிடமிருந்து வாங்கப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0