நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்த நபர்!! கட்டிப்போட்ட சகப் பயணிகள்!!

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்த நபர்!! கட்டிப்போட்ட சகப் பயணிகள்!!

அமெரிக்காவில் உள்ள மில்வாக்கி நகரில் இருந்து டாலஸ் நகர் நோக்கி சென்ற விமானத்தின் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றுள்ளார்.இதனால் சக பயணிகள் அவரை கட்டி போட்டனர்.

இந்த சம்பவம் விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது நடந்தது என்று CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 காலத்திற்கு பிறகு விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் சகித்து கொள்ள முடியாத நடத்தை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

American Airlines விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் “நான் விமானத்திலிருந்து வெளியேற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்ய முயன்றார். அவரை தடுக்கும் முயற்சியில் விமானத்தில் இருந்த சக பயணிகள் அவரை மடக்கி அவர் அங்கிருந்து நகராமல் இருப்பதற்காக பெல்ட் மற்றும் விலங்கை வைத்து கட்டிப்போட்டனர்.

இந்த ஆண்டு மட்டும் இத்தகைய செயல்கள் குறைந்தது 1854 புகார்கள் பதிவாகியுள்ளன.

Follow us on : click here ⬇️