ஓடும் மினி பஸ்ஸிலிருந்து குதித்த நபர்!! அடுத்தடுத்து மோதி கொண்ட வாகனங்கள்!!

சிங்கப்பூரில் கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி ECP ( East Coast Parkway)-இல் மினி பஸ் , லாரி மற்றும் பைக் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.இதில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ரஷ்ய நாட்டு Eldaniz Ibishov (38) என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வந்தது.மினி பஸ்சில் பயணித்த இவர் திடீரென ஓடும் பஸ்சில் இருந்து குதித்துள்ளார்.இதனால் பின்புறம் வந்த லாரி ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார்.

லாரிக்கு பின்புறம் வந்த பைக் ஒன்று லாரியின் மீது மோதியதில் Nurhilmi ( பைக் ஓட்டுநர்) என்பவர் காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் அடிப்படையில் விபத்திற்கு காரணமான Ibishov போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.மேலும் இவரின் மனநல பரிசோதனைக்காக , மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து Ibishov வின் வழக்கறிஞர் Delaney கடந்த டிசம்பர் 7 அன்று ஜாமீன் கோரி வழக்கை தொடுத்துள்ளார்.

Ibishov மற்றும் அவரது சகோதரர் சிறப்பு அனுமதி அட்டையில் சிங்கப்பூர் வந்தாகவும் அவர்களின் அனுமதி வரும் ஜனவரியில் முடிவடைய போவதாகவும் கூறினார்.

எனவே இதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரின் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் விசாரணையை விரைவாக முடிப்பதற்கு முயற்சி எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.மேலும் இவர்கள் சிங்கப்பூரில் இருப்பது உகந்ததல்ல என்பதால் விரைவில் இந்த விசாரணை முடிவுக்கு வரும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் , அதாவது சுயநினைவோடு இவ்வாறு , பொது இடத்தில் மோசமான செயலில் ஈடுபட்டு ஒரு உயிரிழப்பிற்கு காரணமாகும் வகையில் , அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் , S$ 10000 அபராதமும் விதிக்கப்படலாம்.