புளோரிடாவில் சுறா தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்!!

புளோரிடாவில் சுறா தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்!!

புளோரிடாவின் கிழக்கு கடற்கரையில் சுறா தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒருவரை Nassau country sheriff’s Office Marine unit அவர்கள் ஒரு படகில் கண்டுபிடித்தனர்.

பாதிக்கப்பட்ட நபருக்கு நிறைய ரத்தப்போக்கு இருந்ததால் அதை நிறுத்த முதலுதவி அளிக்கப்பட்டது.மேலும் அவரைப் படகு மூலம் கொண்டு சென்றனர்.
பாதிக்கப்பட்டவரை விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜுன் மாதத்தில் வளைகுடா கடற்கரையில் சுறா தாக்குதலால் மூன்று நீச்சல் வீரர்கள் காயமடைந்தனர்.

வடமேற்கு புளோரிடாவில் உள்ள வால்டன் கவுண்டியில் பெண் ஒருவர் சுறா தாக்குதலுக்கு உள்ளானார். அதனால் அவரது கையில் ஒரு பகுதி அகற்றப்பட்டது.

அதே நாளில் மற்றொரு கடற்கரையில் இரண்டு இளம் பெண்கள் சுறா தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

உலகில் பெரும்பாலும் புளோரிடாவில் தான் சுறா தாக்குதல்கள் நடக்கிறது.

கடந்த ஆண்டு சுறா தாக்குதலால் உயிரிழப்பு எதுவும் இல்லை. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 முதல் 100 சுறா தாக்குதல் சம்பவங்கள் பதிவாகிறது.