ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி பலி!!

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி பலி!!

தைவான் நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒருவர் மீது ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மார்ச் மாதம் 16ஆம் தேதி இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

வழியில் ஏதோ ஒரு பொருளின் மீது மோதிய காரணத்தால் திடீரென ரயிலை நிறுத்தியதாக ரயில் ஓட்டுநர் தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர் தேடல் பணியில் ஈடுபட்டனர்.

இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்ததால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு 100 மீட்டர், தூரத்தில் அடிபட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

விபத்து காரணமாக கிழக்கு ரயில் பாதை சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு மேற்கு ரயில் பாதையில் ரயில்கள் மாற்றி விடப்பட்டன.

இதனால் ரயில் சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.