சிங்கப்பூர்:சிங்கப்பூரின் அங் மோ கியோ பகுதியில் நேற்று (நவம்பர் 29) சடலமாக மீட்கப்பட்ட 67 வயது மூதாட்டியை கொலை செய்ததாக 66 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிளாக் 125 அங் மோ கியோ அவென்யூ 6 இல் உள்ள கழக வீட்டில் இந்தக் கொலை நடந்தது.லிம் சுவான் லியானைக் கொலை செய்ததாக சிங்கப்பூரர் இங் சென் ஹெங் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
கொலை செய்ததாக கருதப்படும் இங் சென் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
இதற்கு முன்னர் சந்தேக நபருக்கும் உயிரிழந்த மூதாட்டிக்கும் இடையே பல தகராறுகள் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்ததால், சந்தேக நபர் பலமுறை வீட்டுக்குள் நுழைய முடியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.