போலி துப்பாக்கியை காட்டி வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது…!!

போலி துப்பாக்கியை காட்டி வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது...!!

தென் கொரியாவின் பூசான் நகரில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவர் டைனசார் தண்ணீர் துப்பாக்கியை காட்டி மக்களை மிரட்டியுள்ளார்.

அவர் அதை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி உண்மையான துப்பாக்கி போல காட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் இம்மாதம் 10ஆம் தேதி நடந்துள்ளது.

முகமூடி மற்றும் தொப்பி அணிந்த 30 வயதுடைய நபர் ஒருவர் வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி அனைவரையும் மண்டியிடுமாறு உத்தரவிட்டார்.

பின்பு அந்த நபர் வங்கி மேலாளர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றார்.

வங்கி மேலாளர் உடனடியாக அலுவலக கதவை பூட்டிவிட்டு போலீசாரை தொடர்பு கொண்டார்.

அலுவலகத்திற்குள் நுழைய முடியாத நிலையில், அந்த நபர் வங்கி ஊழியர்களிடம் தனது பையில் கரன்சி நோட்டுகளை போடுமாறு உத்தரவிட்டார்.

அப்போது திடீரென வாடிக்கையாளர்களில் ஒருவர் அந்த நபரை பின்னால் இருந்து தாக்கி அவரது கைகளை பிடித்துக் கொண்டார்.

வங்கிக்குள் நுழைந்த 2 நிமிடத்தில் அந்த நபர் பிடிபட்டார்.

அந்த நபரின் கையிலிருந்து பையை எடுத்தபோது, ​​அது போலி டைனசார் துப்பாக்கி என்பது அனைவருக்கும் தெரிந்தது.

திருட வந்த நபரை தாக்கி துணிச்சலுடன் பிடிக்க உதவிய வாடிக்கையாளருக்கு சான்றிதழ் வழங்கப்படும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.