திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய நபர் கைது..!!!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய நபர் கைது..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சுமார் S$50,000 மதிப்புள்ள ‘ஆங் பாவ்’ பணத்தை திருடியதாக சந்தேகத்தின் பேரில் 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீச் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பின் போது, ​​இரண்டு பணப் பெட்டிகளில் இருந்து ‘ஆங் பாவ்’ பணத்தை திருடியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 5) மதியம் 1 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன்,காவல்துறை அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) கைது செய்தனர்.

அவரிடமிருந்து 3,000 வெள்ளி மீட்கப்பட்டது.

சந்தேக நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.