சிங்கப்பூரில் 25 வயது இளைஞரை கத்தியால் குத்திய நபர் கைது…!!!!

சிங்கப்பூரில் 25 வயது இளைஞரை கத்தியால் குத்திய நபர் கைது...!!!!

சிங்கப்பூர்: ஜாலான் புசாரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்தினம் 25 வயது இளைஞரை கத்தியால் குத்தியதாக 24 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இளைஞர் வேண்டுமென்றே கடுமையான காயம் ஏற்படுத்தியதன் விளைவாக கைது செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 3:40 மணியளவில் அந்த நபர் இளைஞரை கத்தியால் குத்தியுள்ளார்.

காயமடைந்த நபர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

அவரை கத்தியால் குத்திய நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

முதற்கட்ட விசாரணையில், இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதும், அவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்ததும் தெரியவந்தது.

போலீஸ் அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு, கியட் ஹாங் குளோசில் உள்ள வீடு ஒன்றில் அதே நாளில் கைது செய்தனர்.

அவருக்கு அடைக்கலம் கொடுத்த 19 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆடவர் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும் அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

சட்டப்பூர்வமான காரணமின்றி பொது இடங்களில் ஆயுதங்களை வைத்திருப்பது குற்றமாகும் என போலீசார் பொதுமக்களுக்கு நினைவூட்டினர்.