மதுபான முதலீட்டு திட்டத்தில் 12 மில்லியன் வெள்ளிக்கு அதிகமான பணத்தை சுருட்டிய ஆடவர் கைது..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வைன் எனும் மதுபான முதலீட்டுத் திட்டத்தில் 12 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக பண மோசடி செய்ததாக ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Premium Liquid Assets (PLASG) இன் முன்னாள் CEO எல்டிரிக் கொ, மொத்தம் 15 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
பிப்ரவரி 2007 முதல் ஜூன் 2011 வரை, PLASG முதலீட்டாளர்களுக்கு பாட்டிலில்லா ஒயின் “En Primeur” விற்க திட்டமிட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஒயின் பாட்டில்கள் நிரப்பப்படும் வரை முதலீட்டாளர்கள் காத்திருக்க வேண்டும்.
PLASG நிறுவனம் வெளிநாடுகளில் இருக்கும் கிடங்குகளில் ஒயின் பாட்டில்கள் சில ஆண்டுகளுக்கு வைத்திருக்கப்படும் என்று கூறுகிறது.
மேலும் மது பாட்டில்களின் உரிமை முதலீட்டாளர்களின் பெயருக்கு மாற்றப்படும் என்று கூ ஹான் ஜெட் எனும் நபருடன் சேர்ந்து கொ முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளார்.
முதலீட்டாளர்கள் கொடுத்த பணத்தைக் கொ தனது கட்டுப்பாட்டில் இருந்த 2 சிங்கப்பூர் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
இத்திட்டம் பற்றிய விசாரணை தொடங்குவதற்கு முன்னரே அவர் மே 2011 இல் சிங்கப்பூரை விட்டு வெளியேறினார்.
இவ்வாண்டு மே மாதம் சிங்கப்பூர் திரும்பியபோது அவரை கைது செய்தனர்.
Follow us on : click here