சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 41 இல் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக காவல்துறைக்கு புகார் வந்தது.அதன்பின் காவல்துறையினர் அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் கிடைத்த புகைப்படங்களின் உதவியோடு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டனர். சைக்கிளில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரும் கைதுச் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
அவர்களுக்கு வயது 20 என காவல்துறை தெரிவித்தது. புகார் கிடைத்த 7 மணி நேரத்துக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இவர்கள் களவாடியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது. இவர்களுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கியது.
- வெளிச்சமான இடங்களில் மோட்டார் சைக்கிளில் நிறுத்தி வைக்க வேண்டாம். மோட்டார் சைக்கிளைப் பூட்டி வைக்க வேண்டும்.
- இது போன்ற திருட்டு சம்பவங்களைத் தவிர்க்க சமிக்ஞைப் பொருத்த வேண்டும். இது முறையாக செயல்படுகிறதா என்பதையும் அவ்வப்போது பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
- விலை மதிப்பு மிக்க பொருட்களை மோட்டார் சைக்கிள் இருந்து அகற்ற வேண்டும்.