இன்று ஜனவரி 30-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு மலேசிய பிரதமர் சிங்கப்பூருக்கு வந்துள்ளார். இரு நாடுகளும் சந்திப்பில் மூன்று உடன்பாடுகள் கையெழுத்தப்பட உள்ளதாக அறிவித்திருந்தது.
இன்று மூன்று உடன்பாடுகளும் கையெழுத்தப்பட்டது. பசுமை பொருளியல், மின்னிலக்கப் பொருளியல், தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட உடன்பாடுகள் ஆகும்.
மின்னிலக்கப்பொருளியல் உடன்பாட்டால் பாதுகாப்பான மின் கட்டண முறைகள் நாடுகளுக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படும். தனியார் துறையுடன் இணைந்து செயல்படவும், முதலீடு செய்யவும் இரு நாடுகளும் முற்பட்டுள்ளது. இரு நாடுகளும் சாதகமாக அமையும் திட்டங்களுக்கு ஒத்துழைத்து செயல்படுவதற்கு முடிவெடுத்துள்ளது.
பசுமைப் பொருளியல் உடன்பாட்டில் இரு நாடுகளும் கரியமில வாய்வு வெளியேற்றத்தை குறைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்தன. இரு நாடுகளும் ஒன்றிணைந்து நீடித்தன்மைக்கான யோசனைகளையும் ஆராயப் போவதாக தெரிவித்துள்ளன.
தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு உடன்பாட்டில் இரு நாடுகளும் இணைந்து தனி நபர் தகவல் பாதுகாப்புக் குறித்த யோசனைகளைப் பகிர்ந்துக் கொண்டதாகவும் தெரிவித்தன.இணையப் பாதுகாப்பு மிரட்டல்களைச் சமாளிப்பதற்கும் இந்த உடன்பாடு முயற்சி செய்யும் என்றும் தெரிவித்துள்ளன.