நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!!

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்...!!!

மலேசியாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன MH370 விமானத்தின் சிதைவுகளை தேடும் பணியை மீண்டும் தொடங்க மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த முறை, தெற்கு இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணிகள் தொடர திட்டமிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் சென்று கொண்டிருந்த MH370 விமானத்தில் கிட்டத்தட்ட 239 பேர் பயணித்தனர்.

இந்த விமானம் திடீரென நடுவானில் காணாமல் போனது.

விமானத்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் விமானச் சிதைவுகளுக்கான எந்த தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனால் அந்த விமான பாகங்களை தேடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக மலேசியா பிரிட்டனை தளமாகக் கொண்ட ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அதன்படி விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே மலேசிய அரசாங்கம் அந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்தும் என கூறப்படுகிறது.