நூறாவது ஆண்டை நிறைவு செய்யும் மலேசியா- சிங்கப்பூர் பாலம்!! சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு!!

நூறாவது ஆண்டை நிறைவு செய்யும் மலேசியா- சிங்கப்பூர் பாலம்!! சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு!!

சிங்கப்பூர்: மலேசியா-சிங்கப்பூர் பாலம் இன்றுடன் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை குறிக்கும் வகையில் இரு நாடுகளும் சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டுள்ளன.

பொதுமக்கள் போஸ் மலேசியா மற்றும் சிங்கப்பூர் அஞ்சல் கிளைகளில் முத்திரைகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணையம், மலேசியா-சிங்கப்பூர் இணைப்புப் பாலத்தை தினமும் சுமார் 242,000 பேர் கடந்து செல்வதாகக் குறிப்பிட்டது. இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க உட்லண்ட்ஸ் – ஜோகூர் பாலத்தின் 100வது ஆண்டு விழாவை சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து கொண்டாடுகின்றன.

வரலாற்று சிறப்புமிக்க கொண்டாடும் வகையில், இரு நாட்டு தலைவர்களும் இன்று பாலத்தில் சந்தித்து பேசினர்.

அவர்கள் நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு பாலத்தில் 100 புறாக்கள் பறக்க விடப்பட்டன.

ஜொகூர் கடல் பாலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே தரைவழிப் பயணத்திற்கான முக்கிய இணைப்பான கடல் பாலத்தில் ஜூன் 28ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.