வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா!! ரத்தான அமைச்சர்களின் விடுமுறை!!
மலேசியாவில் உள்ள பல மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
மொத்தம் 9 மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
100,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
மலேசியாவில் மேலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் சுமார் 120000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு உதவுவதற்காக 685 தற்காலிக நிவாரண நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் Kelantan மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர் .
இந்த வெள்ளத்தால் அமைச்சர்களின் விடுமுறையை ரத்து செய்துள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்படுவோருக்கு அமைச்சர்கள் நேரில் சென்று உதவி வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுமார் 82,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மீட்பு படகுகள்,ஹெலிகாப்டர்கள் என மீட்பு பணிக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தாய்லாந்தின் தெற்குப் பகுதியிலும் கனமழை பெய்ததால் தற்போது வரை நான்கு பேர் பலியாகியுள்ளனர்.
இந்த வெள்ளத்தால் அங்கு 240000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Follow us on : click here