மலேசியா : திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த இந்தியப்பெண்!! 2 நாட்களாக மேலாக தொடரும் மீட்பு பணி!!

மலேசியா : திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த இந்தியப்பெண்!! 2 நாட்களாக மேலாக தொடரும் மீட்பு பணி!!

மலேசியா : கோலாலம்பூரின் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள நடைபாதையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

நடைபாதையில் நடந்து சென்ற பெண் பள்ளத்திற்குள் விழுந்தார்.இச்சம்பவம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடந்தது.

காணாமற்போன அந்த பெண்ணைத் தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த பெண் இந்தியாவைச் சேர்ந்த விஜயலெட்சுமி(48) என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு இரண்டு மாதங்கள் சுற்றிப்பார்க்க வந்திருந்தபோது இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.

அவர் மீண்டும் இந்தியாவிற்கு நேற்று திரும்பவதாக இருந்தது.

தற்போது அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் அங்குள்ள கடைகளை தற்காலிகமாக மூடுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளத்தில் இருந்து நச்சு வாயு வெளியேறும் அபாயம் உள்ளதால் அதை சுவாசிப்பதை தவிர்க்கும் வகையில் கடைகளை அடைக்குமாறு காவல்துறை அறிவுறுத்தினர்.

“என் தாயை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று அவரது மகன் கண்ணீர் மல்க மன்றாடி கேட்டுக்கொண்டார்.

காணாமற்போன விஜயலெட்சுமியை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.