சிங்கப்பூரில் Woodlands இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தீபகலா வீட்டில் எனி என்ற பணிப்பெண் வீட்டு வேலைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலைக்குச் சேர்ந்தார். அவர் பணிக்கு சேர்ந்து 16 நாட்களில் பெண் முதலாளியால் சித்திரவதைக்கு உள்ளானார்.
எனி சமையலறையில் கரண்டிகளை மாற்றி வைத்ததால் தீபகலா தன் விரலால் எனியின் நெற்றியில் குத்தி காயத்தை ஏற்படுத்தி உள்ளார்.
அதன்பின் “ masking tape ´´ நாடாவை எனியின் நெற்றியில் விட்டெறிந்துள்ளார்.
வீட்டின் நடைபாதையை சுத்தம் செய்ய அரை மணி நேரம் ஆகும் என்று எனி சொன்னார்.தீபகலா கோவமடைந்து பலமுறை எனியின் கன்னத்தில் அறிந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
கணவர் குறுகிட்ட பிறகு எனியை அறைவதை நிறுத்தினார். ஆனால் தீபகலா எனியைக் கம்பால் அடித்துள்ளார்.
எனியின் காயங்களைப் பார்த்த அதே குடியிருப்பில் வேலை செய்யும் மற்றொரு பணிப்பெண் பணிப்பெண்களுக்கான நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
இதனையடுத்து காவல் துறையினர் அங்குச் சென்றனர்.அப்போது எனியின் முகத்திற்கு முக ஒப்பனைச் செய்து தழும்புகளை மறைத்துள்ளார்.
எனியின் முகத்தில் உள்ள ஒப்பனைகளை அகற்றியதால் அவருடைய முகத்தில் காய தழும்புகள் வெளிப்பட்டன.அதன்பின் தீபகலா கைதானார்.
எனியை சித்திரவதைக்கு உள்ளாக்கி , அவருடைய காய தழும்புகளை மறைத்த குற்றத்திற்காகவும் தீபகலாக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றம் 38 வயதுடைய தீபகலா சந்திரன் சேச்சரனுக்கு 10 மாதம் 10 வாரம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
அதோடு எனி அகஸ்டினை கொடுமைப் படுத்தியதற்கு 4000 வெள்ளி இழப்பீடு கொடுக்கபடியும் உத்தரவிடப் பட்டது.
தீபகலா மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது . வேண்டுமென்றே பணிப்பெண்ணுக்கு காயத்தை ஏற்படுத்தியதற்காக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார்.நீதிமன்றம் விசாரணை முடிவில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.