சிங்கப்பூரில் வீடுகளுக்குச் சாயம் பூச இயந்திர மனிதக் கருவிகள்!!

சிங்கப்பூரில் வீடுகளுக்குச் சாயம் பூச இயந்திர மனித கருவிகள்!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் புதிய BTO திட்டங்களில் சாயம் பூசுவதற்கு இயந்திரமயமாக்கப்பட்ட மனிதக் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

அந்த செயல்முறை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட மனித கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானத் திறன் மேம்படுத்தப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் இயந்திரமயமாக்கப்பட்ட மனித கருவிகள் சாயம் பூசுதல் போன்ற உட்புற வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ்,புதிய BTO திட்டங்களில் நவீன கருவிகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

கட்டுமான தொழில் வல்லுனர்களுக்கான சங்கம் நடத்திய மாதாந்திர கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.