மாணவர்களுக்கு புதுமை மற்றும் வடிவமைப்பை கற்பிக்கும் புதிய உத்தி!!
சிங்கப்பூர்: உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொழில்துறையில் மட்டுமல்ல கல்வியிலும் காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்தை புகுத்துவது அவசியம். அந்த வகையில் தேசிய பள்ளி அமைப்பில் புதுமை மற்றும் வடிவமைப்பை கற்பிக்கும் புதிய உத்தி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அந்த சிந்தனையை தூண்டும் வகையில் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒரு நகல் திட்டம் தொடங்கப்பட்டது.
எதிர்கால பொருளியல் தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
ஆரம்பப் பள்ளி முதலே தொலை நோக்கு பார்வை, உலகளாவிய அணுகுமுறை, திறன்கள் மற்றும் பண்புகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் சிக்கலான அம்சங்களைத் தீர்க்க மாணவர்கள் புதிய உத்திகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திறன்களை மேம்படுத்துதல் போன்றவைகளும் கல்வி மேம்பாட்டு திட்டத்தில் அமையும்.
மாணவர்கள் உயர்கல்வி நிலையில் பல்வேறு துறைகளில் அனுபவம் பெறுகின்றனர்.
Follow us on : click here