சிங்கப்பூர் வானில் எரி நட்சத்திரங்கள்!! எப்போது?

சிங்கப்பூரில் வரும் ஏப்ரல் 22,23 ஆகிய தேதிகளில் வானில் ‘லிரிட்’ விண்கல் மழையைப் பார்க்க முடியும்.
அதை எரி நட்சத்திரங்கள் என்றும் கூறுவர்.
இந்நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கும்.அதேபோல இவ்வாண்டும் வானில் இந்நிகழ்வு நடக்கும்.அது ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23 ஆம் தேதி வரை வானத்தில் பார்க்க முடியும்.
‘லிரிட்’ விண்கல்களை இரவு 1.00 மணிக்கு பிறகு வானில் தெளிவாக பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 10 முதல் 20 விண்கல்கள் வரை வானில் தென்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை அறிவியல் நிலைய வான் ஆய்வுக்கூடம் ஏப்ரல் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
லிரிட் விண்கல்கள் பொதுவாக நீண்ட தூசப் பாதைகளை விட்டுச் செல்வதில்லை என்றாலும் அவை எப்போதாவது பிரகாசமான மின்னல்களை உருவாக்குவதாக கூறப்படுகிறது.
அதை பார்ப்பதற்கு சிறப்பு கருவிகள் தேவையில்லை என்று ஆய்வுக்கூடம் சொன்னது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan