சிங்கப்பூரில் உங்கள் பாஸ்போர்டை தொலைத்து விட்டீர்களா?? என்ன செய்வதென்று தெரியவில்லையா??
சிங்கப்பூரில் உங்கள் PASSPORT -ஐ தொலைத்துவிட்டீர்களா?? என்ன செய்வதென்று தெரியவில்லையா??
அப்படி என்றால் இந்த பதிவை முழுமையாக வாசியுங்கள்!! தெரிந்து கொள்ளுங்கள்!! தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
இயல்பாக பாஸ்போர்ட் – இன் முக்கியத்துவம் நாம் அறிந்தவையே.எனவே அதை பாதுகாப்போடு வைத்திருப்பதும் நமது கடமையே ஆகும்.
சிங்கப்பூரை பொறுத்தவரையில், MOM அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, “வெளிநாட்டு ஊழியர்களின் பாஸ்போர்ட் – ஐ அவர்கள் வேலை செய்யும் கம்பெனிகள் எக்காரணத்திற்காகவும் வாங்கி வைத்திருக்க கூடாது “.இருப்பினும் ஒரு சில கம்பெனிகள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களின் பாஸ்போர்ட்டை கம்பெனிகளின் மேற்பார்வையில் வைத்திருக்கின்றது.
காரணம், ஊழியர்கள் தங்களின் பாஸ்போர்ட்டை தொலைத்துவிடக் கூடாது என்பதேயாகும்.
எனவே கவனக்குறைவோடு செய்யும் தவறுதலுக்கான பின்விளைவை நாம் எதிர் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இருப்பினும் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் உங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டீர்கள் என்னும் பட்சத்தில் , முதலில் நீங்கள் வேலை செய்யும் கம்பெனிக்கு இதை தெரியப்படுத்துங்கள்.
அது மட்டும் இன்றி உங்கள் பாஸ்போர்ட்டின்
நகல்(Xerox) இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.தவறும் பட்சத்தில், நீங்கள் வேலை செய்யும் கம்பெனியிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
அதன் பின்,நீங்கள் இருக்கும் பகுதில் உள்ள காவல் நிலையத்தில் நடந்ததை கூறி புகாரளியுங்கள்.
காவல் நிலையத்தில் புகாரளித்த ஒரு வாரத்தில் உங்களுக்கு தகவல் அளிக்கப்படும்.பாஸ்போர்ட் கிடைத்து விட்டால் நீங்கள் வாங்கி கொள்ளலாம்.
ஆனால் கிடைக்காத சூழலில், நீங்கள் புதிய பாஸ்போர்ட்-க்கு அப்ளை செய்வது அவசியமாகும்.
கீழ்க்காணும் இரண்டு வழிகளில் நீங்கள் புதிய பாஸ்போர்ட்-க்கு அப்ளை செய்யலாம்.
1.BLS இன்டர்நேஷனல் (விசா மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம் – Sim lim tower, சிங்கப்பூர்)
இங்கு நீங்கள் நேரடியாக சென்று புதிய பாஸ்போர்ட்-க்கு அப்ளை செய்யலாம்.
தேவையான ஆவணங்கள்: காவல் நிலையத்தில் புகாரளித்த கடிதத்தின் நகல் , IP மற்றும் நீங்கள் வேலைசெய்யும் கம்பெனியின் கடிதம்.அத்தோடு உங்கள் புகைப்படம் (4) , ஒர்க் பர்மிட் (ஒரிஜினல் மற்றும் நகல்) , பாஸ்போர்ட் நகல்
மேலும் இதர ஆதாரங்கள்: உங்கள் தாய்நாட்டில், உள்ள எவரேனும் ஒருவரின் (பெற்றோர் அல்லது உறவினர்) தொலைப்பேசி எண் மற்றும் காவல் நிலையத்தின் முகவரி.
இங்கு நேரடியாக சென்று அப்ளை செய்வதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.காரணம் அலுவலக பணி நேரம் காலை 9.00 மணி முதல் மாலை 3.45 வரை மட்டுமே இதனால் அனுமதி நேரம் கிடைப்பது கடினம்.
2.IT world கம்ப்யூட்டர் சென்டர்(BLS இன்டர்நேஷனல் எதிரில் )
உடனடி தீர்வு வேண்டும் என்றால் இங்கு செல்லலாம், இவர்களே BLS இல் கேட்கப்படும் பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கான ஆவணங்களை சமர்பித்து , அனுமதி நேரத்தை நம்மிடம் தெரிவிப்பார்கள்.
இதனால் நாம் வேலை நேரம் பாதிக்காது.தேவையான ஆவணங்கள்: காவல் நிலையத்தில் புகாரளித்த கடிதத்தின் நகல் , IP மற்றும் நீங்கள் வேலைசெய்யும் கம்பெனியின் கடிதம்.அத்தோடு உங்கள் புகைப்படம் (4) , ஒர்க் பர்மிட் (ஒரிஜினல் மற்றும் நகல்) , பாஸ்போர்ட் நகல்
மேலும் இதர ஆதாரங்கள்: உங்கள் தாய்நாட்டில், உள்ள எவரேனும் ஒருவரின் (பெற்றோர் அல்லது உறவினர்) தொலைப்பேசி எண் மற்றும் காவல் நிலையத்தின் முகவரி.
இருப்பினும் அப்ளை செய்வதற்கான தொகை BLS ஐ விட இங்கு S$ 50 அதிகம்.புதிய பாஸ்போர்ட் அப்ளை செய்ய குறைந்த பட்சம் S$285 தேவைப்படலாம்.
அப்ளை செய்த நாளில் இருந்து 3 – 4 நாட்களில் உங்களின் ஆவணங்கள் பார்வையிடப்பட்டு உறுதிசெய்யப்பட்ட பிறகே புதிய பாஸ்போர்ட் உங்கள் கைகளில் கிடைக்கும்.அப்ளை செய்த குறைந்த பட்ச 10 நாட்களில் உங்கள் பாஸ்போர்ட் கிடைக்கும்.