கட்டுப்பாட்டை இழந்த லாரி!! கார் மீது விழுந்த கண்டெயினர்!! இளம்பெண்ணின் கடைசி நிமிடங்கள்!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி!! கார் மீது விழுந்த கண்டெயினர்!! இளம்பெண்ணின் கடைசி நிமிடங்கள்!!

மலேசியாவில் உள்ள பினாங்கு நகரத்தில் கண்டெயினர் கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் 21 வயதுடைய இளம்பெண் உயிரிழந்ததாக The Star செய்தி நிறுவனம் வெளியிட்டது.

விபத்தில் சிக்கிய அந்த பெண் இறப்பதற்கு முன்னதாக அவரின் அம்மாவை தொடர்பு கொண்டதாகவும்,“அம்மா மிகவும் வலிக்கிறது!,” என்று அவரது தாயார் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதன் பின் அமைதி நிலவியுள்ளது,பதறிக்கொண்டு எங்கு இருக்கிறார் என்று கேட்டார். அமைதி நிலவியதை அடுத்து மகள் உயிரிழந்து விட்டதை உணர்ந்ததாக கூறினார்.

கண்டெயினரை ஏற்றி சென்ற லாரி சாலையின் வளைவில் திரும்ப முற்பட்ட போது வாகனத்தின் கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்தார்.

இதனால் லாரியில் இருந்த கண்டெயினர் சரிந்து அந்த பெண்ணின் கார் மீது விழுந்தது.

இதனால் அந்த பெண்ணின் கார் நொறுங்கியது.சம்பவ இடத்திலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் இன்னொரு காரும் சேதமடைந்தது.அதில் இருந்த 25 வயதுடைய கார் ஓட்டுநர் பலத்த காயங்கள் ஏற்பட்டது.அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த பயங்கர விபத்தில் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனை, 50000 ரிங்கிட் அபராதம் மற்றும் 20 ஆண்டுகளுக்கு வாகன ஓட்டத் தடையும் விதிக்கப்படும்.