நீண்ட வாரயிறுதி விடுமுறை!! குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் அறிவுரை!!

நீண்ட வாரயிறுதி விடுமுறை!! குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் அறிவுரை!!

வரும் ஜூன் 17-ஆம் தேதி ஹஜ்ஜீப் பெருநாள் தினம். நீண்ட வார இறுதியை முன்னிட்டு இரண்டு நிலச் சோதனைச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் தொடரும் என குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.

கடந்த ஜூன் 13-ஆம் தேதி உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளை சுமார் 510,000 க்கும் மேற்பட்டோர் கடந்து சென்றதாக ஆணையம் தெரிவித்துள்ளது.அந்த விவரங்களை அதன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் அதன் குடிநுழைவு நடைமுறைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் கூடுதல் காத்திருப்பு நேரம் ஆகலாம் அதற்கு பயணிகள் தயாராக இருக்குமாறும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நில சோதனைச்சாவடிகள் குறித்த தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள அதன் முகநூல் பக்கத்தை அணுகுமாறு கேட்டுக்கொண்டது.