சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!!

சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!!

சீனாவில் நான்கு வயது சிறுமி ஒருவருக்கு சமூக வலைதளங்களில் 21 மில்லியன் ரசிகர்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் குய்சாவ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுமிக்கு Yaouyou என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Yaouyou இன் பெற்றோர் 2021 முதல் Douyin இணையதளத்தில் அவரது அன்றாட நடவடிக்கைகளின் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக நள்ளிரவில் அழத் தொடங்கிய அவளை அம்மா மீண்டும் தூங்க வைக்கும் வீடியோ மிகவும் பிரபலமானது.

இதுவரை அப்லோட் செய்யப்பட்ட சிறுமியின் 460 வீடியோக்களை 580 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.

அவரது கொழு கொழு கன்னங்களும் ரோஜா மலர் போன்ற முக பாவனைகளையும் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மறுபுறம், சிறுமியை ஏன் அவளது பெற்றோர் பாலர் பள்ளிக்கு அனுப்பவில்லை என்று சிலர் கேள்விழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த Yaouyou இன் தாய், உள்ளூர் பாலர் பள்ளிகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், நகர்ப்புறத்திற்குச் சென்ற பிறகு, அங்குள்ள பாலர் பள்ளியில் அவளைச் சேர்க்க விரும்புவதாகவும் கூறினார்.