தீபாவளிக்குப் பிறகு உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் புதுடெல்லியுடன், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் இணைந்துள்ளன.
கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் 196 மற்றும் 163 AQI அளவாக பதிவாகி உள்ளது.
மேலும், இந்த மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா நான்காவது இடத்தையும், மும்பை எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிற்கு பிறகு, புதுடெல்லியில் காற்றின் தர குறியீடு 680ஆக இருந்தது. இது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் தலைநகரில் பட்டாசு வெடிக்கத் தடைவிதிக்கப்பட்டாலும், அது அரிதாகவே செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தனர்.