2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச்சிறந்த 20 விமான நிலையங்களின் பட்டியல்..!!!

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச்சிறந்த 20 விமான நிலையங்களின் பட்டியல்..!!!

விமானப் போக்குவரத்து மதிப்பீட்டு அமைப்பான ஸ்கைட்ராக்ஸால் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச்சிறந்த விமான நிலைய பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலைய பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.மேலும் இது 13வது முறையாக இந்தப் பட்டத்தை வென்றுள்ளது.

அங்கு பயணிகள் தங்கள் விமானப் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே தங்கள் பைகளை இறக்கி வைக்க அனுமதிக்கும் வகையில் முன்கூட்டியே செக்-இன் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் விமான நிலையத்தில் தங்கள் நேரத்தை விடுமுறையின் ஒரு பகுதியாக அனுபவிக்க முடியும்.

பெரும்பாலான பார்வையாளர்கள் 2024 ஆம் ஆண்டில் 80 மில்லியன் மக்களைக் கவர்ந்த பிரமாண்டமான 10-மாடி ஜூவல் ஷாப்பிங் வளாகத்திற்குச் செல்கின்றனர். இங்கு பட்டாம்பூச்சி சரணாலயம் உட்பட பல உட்புறத் தோட்டங்களையும் கொண்டுள்ளது.மேலும் இது 130 அடி (40 மீட்டர்) உயரமுள்ள ஒரு பிரமிப்பூட்டும் உட்புற நீர்வீழ்ச்சியை கொண்டுள்ளது. மேலும் இது உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஆகும்.

ஷாப்பிங் மற்றும் இயற்கையைத் தாண்டி அங்கு கடைகள், ஹோட்டல்கள், கலைக் காட்சிகள், அருங்காட்சியகம், திரையரங்கம் மற்றும் டைனோசர் பொழுதுபோக்கு பூங்கா கூட உள்ளன.

உலகின் சிறந்த விமான நிலையத்திற்கான விருதை மூன்று முறை வென்ற தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம், இந்த ஆண்டு 2வது இடத்தைப் பிடித்துள்ளது.அத்துடன் உலகின் சிறந்த விமான நிலைய ஷாப்பிங் மற்றும் மத்திய கிழக்கின் சிறந்த விமான நிலையத்திற்கான விருதைப் பெற்றது.

டோக்கியோ ஹனேடா விமான நிலையம் உலகத் தரவரிசையில் 3வது இடத்தைப் பிடித்தது. உலகின் தூய்மையான விமான நிலையம் (பெரிய விமான நிலையம்), உலகின் சிறந்த உள்நாட்டு விமான நிலையம் மற்றும் உலகின் சிறந்த விமான நிலைய PRM & அணுகக்கூடிய வசதிகளை வழங்குதல் ஆகிய விருதுகளைப் பெற்றது.

இந்திய விமான நிலையங்கள் உலகின் முதல் 20 விமான நிலையங்களின் தரவரிசை பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், டெல்லி சர்வதேச விமான நிலையம் இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிலையம் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.

இது தவிர, ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிலைய பணியாளர் சேவைக்கான விருதைப் பெற்றது.

பெங்களூரு சர்வதேச விமான நிலையம் இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த பிராந்திய விமான நிலையத்திற்கான விருதைப் பெற்றது.

மேலும், கோவாவின் மனோகர் சர்வதேச விமான நிலையம் 5 மில்லியனுக்கும் குறைவான பயணிகள் பிரிவில் சிறந்த விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 20 விமான நிலையங்களின் பட்டியல்


1.சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்
2.ஹமாத் சர்வதேச விமான நிலையம்,
தோஹா
3.டோக்கியோ சர்வதேச விமான நிலையம் ஹனெடா
4.இஞ்சியோன் சர்வதேச விமான நிலையம், தென் கொரியா
5.நரிட்டா சர்வதேச விமான நிலையம், ஜப்பான்
6.ஹாங்காங் சர்வதேச விமான நிலையம்
7.பாரிஸ் சார்லஸ் டி கோலே விமான நிலையம்
8.ரோம் ஃபியூமிசினோ விமான நிலையம்
9.முனிச் விமான நிலையம்
10.சூரிச் விமான நிலையம்
11.துபாய் சர்வதேச விமான நிலையம்
12.ஹெல்சின்கி-வான்டா விமான நிலையம்
13.வான்கூவர் சர்வதேச விமான நிலையம்
14.இஸ்தான்புல் விமான நிலையம்
15.வியன்னா சர்வதேச விமான நிலையம்
16.மெல்போர்ன் விமான நிலையம்
17.சுபு சென்ட்ரைர் சர்வதேச விமான நிலையம், ஜப்பான்
18.கோபன்ஹேகன் விமான நிலையம்
19.ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையம்
20.பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம்