ஓடிடியில் இன்று வெளியாக உள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்…!!

ஓடிடியில் இன்று வெளியாக உள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்...!!

OTT தளத்தில் இன்று எந்தெந்த படங்கள் வெளியாகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

லக்‌ஷ்மன் உட்டேகர் இயக்கத்தில் நடிகர் விக்கி கௌஷல் நடித்துள்ள சாவா திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகிறது.

நடிகர் நானியின் கோர்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் இன்று வெளியாக உள்ளது.

அறிமுக இயக்குனர் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள பெருசு திரைப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகிறது.

ஜெகபதி பாபு நடித்த தெலுங்கு படம் ராக்‌ஷசா சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இன்று வெளியாகிறது.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடிக்கும் ஸ்வீட்ஹார்ட் படத்தை இன்று ஜியோ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் காணலாம்.

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் உருவாகியுள்ள ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தை Tentkota OTTயில் பார்க்கலாம்.

விமல் மற்றும் சூரி நடித்த படாவா திரைப்படம் இன்று சிம்ப்ளி சவுத் OTT தளத்தில் வெளியிடப்பட உள்ளது.

நடிகர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதி நடித்த கிங்ஸ்டன் படம் வரும் ஏப்ரல் 13 அன்று Zee5 OTT தளத்தில் வெளியாக உள்ளது.