அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!!

அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!!

அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வருவதைக் கட்டுப்படுத்த இப்போது டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபரான டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.குறிப்பாக சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அவர் எடுத்த நடவடிக்கை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது .அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

இது மட்டுமல்லாமல் அமெரிக்காவுக்குள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவதையும் கூட கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில நாடுகளின் விசா செயல்முறையில் குழப்பம் இருப்பதாகவும்,இதனால் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வர தடை விதிக்க அல்லது கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசிலீத்து வருவதாக தகவல் வெளி வந்துள்ளது.

டிரம்ப் கொரோனா காலத்தில் சீனாவைச் சேர்ந்தவர்கள் வர முழுவதுமாக தடை விதித்திருந்தார்.இப்போது சுமார் 41 நாடுகளை தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தடை விதிக்க போகிறார்.

சுமார் 41 நாடுகள் பரிசீலனை லிஸ்டில் இருக்கிறது.இந்த நிலையில் இறுதி பட்டியலில் ஓரிரு நாடுகள் சேர்க்கப்படும் அல்லது நீக்கப்படும்.இருப்பினும் இந்த விவகாரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.இது குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்த லிஸ்டில் எந்தெந்த நாடுகள் உள்ளன? என்பதைப் பற்றி காண்போம்.

முழுவதுமாக தடை :

அமெரிக்காவுக்குள் ஆப்கானிஸ்தான்,கியூபா,ஈரான்,லிபியா,வட கொரியா,சோமாலியா,சூடான்,சிரியா,வெனிசுலா,ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவதை முழுவதுமாக தடை செய்ய திட்டமிட்டுள்ளது.

விசா கோரி இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்தாலும் அவை நிராகரிக்கப்படும்.

சுற்றுலா,மாணவர் விசா தடை :

எரிட்ரியா,ஹைட்டி,லாவோஸ்,மியான்மர்,தெற்கு சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா ,மாணவர் தடை விதிக்க பரிசீலனை செய்யப்படுகிறது.இந்த நாட்டை சேர்ந்த மாணவர்களால் அமெரிக்காவிற்கு வந்து படிக்க மாணவர் விசா பெற முடியாது.

அமெரிக்காவைச் சுற்றி பார்ப்பதற்கான சுற்றுலா விசாவும் கிடைக்காது.

பரிசீலனை பட்டியலில் உள்ள நாடுகள் :

பாகிஸ்தான்,பூட்டான்,அங்கோலா,ஆண்டிகுவா மற்றும் பார்புடா,பெலாரஸ்,பெனின்,புர்கினா,பாசோ,காபோ வெர்டே,கம்போடியா,கேமரூன்,சாட்,காங்கோ ஜனநாயக குடியரசு,டொமினிகா,எக்குவடோரியல் கினியா,காம்பியா,லைபீரியா,மலாவி,மவுரித்தேனியா,காங்கோ குடியரசு,செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்,செயிண்ட் லூசியா,சாவ் டோம் மற்றும் பிரின்சிப்,சியரா லியோன்,கிழக்கு திமோர்,துர்க்மெனிஸ்தான்,வனுவாட்டு .

இந்த நாடுகளின் விசா நடைமுறையில் குறைபாடுகள் இருப்பதாக அமெரிக்க அரசு கருதுவதாக கூறப்படுகிறது.அந்த சிக்கல்களை குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்ய வேண்டும் என்றும் சரி செய்யவில்லை என்றால் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் மாணவர் மற்றும் சுற்றுலா விசா கிடைக்காது என்று கூறப்படுகிறது.