லிட்டில் இந்தியாவில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை...!! 19 கடைகளில் திடீர் சோதனை..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் 19 கடைகளில் உரிமம் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மது விற்பனை தொடர்பாக கடந்த மாதம் அக்டோபர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை கடைகளில் சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
நோரிஸ் சாலை,சாலை, கஃப் சாலை, கிலைவ் தெரு,அப்பர் வெல்ட் சாலை, டன்லோப் தெரு, சந்தர் சாலை, கர்பாவ் சாலை மற்றும் கேம்ப்பல் லேன் ஆகிய 19 கடைகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒரு கடையில் மது அருந்துவதற்கு அனுமதி இல்லாமல் தனி அறை ஒன்று அமைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மற்ற கடைகள் உரிமம் பெறாமல் இருப்பது அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் மதுபானம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரிமம் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்யும் குற்றத்திற்கு அதிகபட்சமாக 20,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.
மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு 20,000 வெள்ளி வரை அபராதம், 3 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மதுபானக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2015ன் கீழ், நிர்ணயிக்கப்பட்ட வர்த்தக நேரத்திற்குப் பிறகு மதுபானங்களை விற்றால் 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL