லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா?

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா?

அர்ஜென்டினா நட்சத்திரம் Lionel Messi சிங்கப்பூர் வருகிறார்.அவருடன் மேலும் 7 வீரர்கள் வருகிறார்கள்.2026 ஆம் ஆண்டு கண்காட்சி போட்டியில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியாவிலும் இதே போன்ற ஆட்டம் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கிறது.

போட்டிகள் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மற்றும் HSBC வங்கிக்கும் இடையேயான ஓராண்டுப் பங்காளித்துவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன.

சிங்கப்பூருக்கு மெஸ்ஸி வருவது இது முதல்முறை அல்ல.

அவர் 2017 ஆம் ஆண்டி நட்புமுறைக் கால்பந்து ஆட்டத்தில் விளையாட இருந்தார்.அனால் சிங்கப்பூருக்கு வந்தபின் திருமண வேலைக்காக கிளம்பி விட்டார்.இதற்காக எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.

ஹாங்காங்க்கு கடந்த ஆண்டு நட்புமுறை ஆட்டத்துக்காக சென்றவர் காயத்தைக் காரணமாக காட்டி விளையாடவில்லை.

ரசிகர்கள் அந்த ஆட்டத்திற்கான ஒரு டிக்கெட்டை வாங்க 640 அமெரிக்க டாலர் வரை செலவு செய்திருந்தனர்.இழப்பீடு வேண்டும் என்று சிலர் கேட்டிருந்தனர்.