புற்றுநோய் போராட்டத்துடன் வாழ்க்கை!!அவரின் இறுதி கலை நிகழ்ச்சி!!
பங்களாதேஷத்தை சேர்ந்த 37 வயதான Fazley Elahi என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு வேலை செய்வதற்காக சிங்கப்பூர் வந்தார்.
சிங்கப்பூரில் உள்ள சக வெளிநாட்டினருக்காக பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக ஒரு கலாச்சார நிகழ்ச்சியையும் ,நூலகத்தையும் தொடங்கிய பெருமை இவரைச் சேரும்.
ஆனால் சிங்கப்பூரில் அவரது காலம் விரைவில் முடிவடையப் போகின்றது. ஆம், திரு ஃபாஸ்லிக்கு டெர்மினல் கேன்சர் உள்ளதாம்.
முதலில் அவரது கீழ் உடலைத் தாக்கிய நோய் இப்போது அவரது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
அவர் தனது இறுதி வாழ்க்கையை தனது மனைவி மற்றும் மகனுடன் கழிக்க விரும்புகிறார்.
இதனால் சிங்கப்பூரில் இவரது தலைமையில் ஜூன் 16-ம் தேதி கலாச்சார நிகழ்ச்சி இறுதியாக நடைபெற உள்ளது.
கடந்த 2018 முதல், அவர் நடனம், பாடல் மற்றும் கவிதை கலைகளில் ஆர்வமுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்காக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறார்.
தனக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும், நோய் மற்ற உறுப்புகளுக்கும் பரவியதால் நோய் தீவிரம் அடைந்துள்ளது.வேலை இழந்த பிறகு, குறைந்த சம்பளத்தில் வேறு வேலைக்குச் சேர்ந்தார்.
அவரது நுரையீரல் மற்றும் எலும்புகளுக்கு புற்றுநோய் பரவியதை அறிந்த மருத்துவர், அவரது ஆயுட்காலம் 3 முதல் 6 மாதங்கள் வரை என்று கூறினார்.
“முடிந்தால், நான் என் நாட்டில் சிகிச்சை பெறுவேன், என்னால் குணமடைய முடியாவிட்டால், பரவாயில்லை, எல்லா பணத்தையும் எனக்காக செலவழிக்க விரும்பவில்லை,” என்று திரு.ஃபாஸ்லி கூறினார்.
இத்தனை வருடங்களாக குடும்பத்திற்காக உழைத்தவர், அவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. அவர் ஜூன் 23ஆம் தேதி தன் தாயகத்திற்கு திரும்புகிறார்.
Follow us on : click here