2024 ஆம் ஆண்டு S-Pass இல் சிங்கப்பூர் செல்வது எப்படி என்பதை பார்ப்போமா!!

2024 ஆம் ஆண்டு S-Pass இல் சிங்கப்பூர் செல்வது எப்படி என்பதை பார்ப்போமா!!

2024 ஆம் ஆண்டு S-Pass இல் சிங்கப்பூர் செல்வது எப்படி என்பதை பார்ப்போமா!!
சிங்கப்பூரில் வேலை பார்ப்பதற்கு நிறைய பெர்மிட்கள் உள்ளன. அவை NTS Permit,Shipyard Permit, PCM permit,S pass, E Pass, Work Permit உள்ளிட்ட வேலை வாய்ப்புகளுக்கான பெர்மிட்கள் உள்ளன.

அதில் S Pass மிகவும் முக்கியமான பெர்மிட். இதை வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமாக தேர்வு செய்கின்றனர்.
எதற்காக என்றால் இதில் நல்ல சம்பளம் கிடைக்கும். அதோடு அவர்கள் குடும்பத்தையும் அழைத்து செல்லலாம்.

வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமாக வேலைப் பார்ப்பதால் சிங்கபூரர்களுக்கு வேலை கிடைப்பதில் அதிக சிரமம் இருந்தது. இதை மாற்றுவதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் quota என்ற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது.

இந்த Quota பிரச்சினை சிங்கப்பூரில் தற்போது அதிகமாக உள்ளது. உதாரணமாக service sector (சேவை துறை) இல் 8 சிங்கபூரர்கள் வேலை செய்தால் மட்டுமே 7 வெளிநாட்டு ஊழியர்களை கம்பெனி எடுக்கமுடியும் என்பது தற்போதைய நிலை.

இதை தவிர்த்து மற்ற துறையில்(other sector) இல் 4 சிங்கபூரர்கள் வேலை செய்தால் மட்டுமே S-Pass இல் ஒரு வெளிநாட்டு ஊழியரை சிங்கப்பூருக்கு அழைத்து வரமுடியும்.

இதனால் s- pass வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதற்கு தயங்குகிறார்கள். அவர்களுக்கு குறைந்தது $3000 சிங்கப்பூர் டாலர் சம்பளமாக கொடுக்க வேண்டும்.

Finance sector இல் $3500 சம்பளம் கொடுக்க வேண்டும். 2024 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மற்ற sector இல் $3150 சிங்கப்பூர் டாலர் கொடுக்க வேண்டும். Financial அல்லது service sector இல் $3650 சம்பளமாக கொடுக்க வேண்டும்.

2025 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மற்ற sector வேலைக்கு $3300 சிங்கப்பூர் டாலர்,Financial & service sector வேலைக்கு $3800 டாலர் சம்பளம் கொடுக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் குடும்பத்தை அழைத்து செல்கிறீர்கள் என்றால் உங்கள் சம்பளம் $6000 சிங்கப்பூர் டாலராக இருக்க வேண்டும்.

S Pass எடுக்க கம்பெனிகள் தயக்கம் காட்டுவது ஏன்?

முதலில் சம்பளம், பிறகு Quota அதனால் அனைத்து கம்பெனிகளும் தயங்குகின்றனர்.