சிங்கப்பூர் செல்வதிலும் சென்ற பின்னர் ஏற்படும் பிரச்சினைகளையும் பற்றி பார்ப்போமா!!

சிங்கப்பூர் செல்வதிலும் சென்ற பின்னர் ஏற்படும் பிரச்சினைகளையும் பற்றி பார்ப்போமா!!

1. சிங்கப்பூர் செல்வதில் உள்ள பிரச்சினைகள் :

தற்போது டெஸ்ட் அடிப்பதற்கான சென்டர்கள் தற்காலிகமாக திறக்கப்படவில்லை என்பது கவலைக்குரியது.படித்த படிப்பிற்கான வேலை கிடைப்பதிலும் சிரமம் உள்ளது.

இருப்பினும் ஏதேனும் ஒரு வழியில் தகுதிக்கேற்ற வேலை கிடைத்தாலும் ஏஜென்ட் தொகை அதிகமாக இருப்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

அதிக தொகையாக இருந்தாலும் கடன் வாங்கியாவது சிங்கப்பூர் செல்ல வேண்டுமென நினைத்து ஏமாறுபவரும் உண்டு. அப்படி ஏமாறாமல் சிங்கப்பூர் சென்றாலும் வாங்கிய கடனை அடைக்க பல வருடங்கள் கடந்து விடுகிறது.

இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதால் சிங்கப்பூர் செல்ல வேண்டுமென்ற கனவோடு இருப்பவர்களுக்கு “சிங்கப்பூர்” என்பது கனவாகவே உள்ளது.

2. சிங்கப்பூர் சென்ற பின் ஏற்படும் பிரச்சனைகள் :

சிங்கப்பூர் சென்ற பிறகுதான் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதில் குறிப்பாக உயர் அதிகாரிகள் தொல்லை. ஆனால்,எல்லா உயர் அதிகாரிகளும் இது போன்று நடந்து கொள்வார்கள் என்று கூற இயலாது.அவர்களில் ஒரு சிலர் உயர் அதிகாரிகள் மட்டும் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.சிங்கப்பூருக்கு முதல்முறையாக அல்லது புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு உயர் அதிகாரிகள் பிரச்சனைகளை கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.

சிங்கப்பூருக்கு முதல்முறையாக வருபவர்களுக்கு மொழி, இடம், ஆட்கள் எல்லாமே புதிதாக இருப்பதால் என்ன செய்வதென்று அவர்களுக்கு புரிவதில்லை.நமது தாய் நாட்டில் இருந்து இவர்களுக்கு முன்னால் சென்றவர்கள் உயர் பதவியில் இருந்து கொண்டு புதிதாக வந்தவர்களை மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்துகிறார்கள். பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். இது புதிதாக சென்றவர்களுக்கு மிகவும் பிரச்சினையாக அமைகிறது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இதனால் அவர்கள் தாய்நாடு திரும்பும் நிலை கூட ஏற்படுகிறது. புதிதாக சென்றவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்கள் தமிழர்களாக இருந்தாலும் கூட இந்த நிலையே நீடிக்கிறது. தயவு செய்து இந்த நிலை மாற வேண்டும், புதிதாக வந்தவர்களையும்,அவர்களின் குடும்பத்தை பற்றியும் யோசித்து அவர்களை கண்ணியமாக நடத்தினால் இந்த நிலை மாறும்.