பாயா லேபர் ரயில் நிலையத்திற்கு அருகில் காணப்பட்ட பெரிய மலைப்பாம்பு..!!!

பாயா லேபர் ரயில் நிலையத்திற்கு அருகில் காணப்பட்ட பெரிய மலைப்பாம்பு..!!!

சிங்கப்பூர்: பாயா லேபார் ரயில் நிலையம் அருகே மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டது.

தேசிய பூங்கா சேவை அதிகாரிகள் அதை கைப்பற்றும் காணொளியானது முகநூல் தளத்தில் சிங்கப்பூர் வனவிலங்கு பார்வை குழு பக்கத்தில் பகிரப்பட்டது.

அந்த வீடியோவில், இரண்டு அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள புதரில் இருந்து பாம்பை அகற்றுவதைக் காணலாம்.

பாயா லேபார் ரயில் நிலையம் பின்னணியில் தெரிகிறது.

இரண்டு அதிகாரிகளும் ஒரு நீண்ட பழுப்பு நிற மலைப்பாம்பை புல் மீது விரித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் மலைப்பாம்பை கூண்டில் அடைத்தனர்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பெரிய மலைப்பாம்பை கண்டு அச்சம் தெரிவித்தனர்.

பாம்பிடம் இருந்து விலகிச் செல்லாமல் வீடியோ பதிவு செய்தவர்களின் துணிச்சலைப் பாராட்டினர்.