நிலச் சரிவால் சேதமடைந்த உலு பாண்டான் பூங்கா இணைப்பு!வடபகுதி சீரமைக்குப்பின் திறப்பு!

கடந்த செப்டம்பர் மாதத்தில் நேர்ந்த நிலச்சரிவால் உலு பாண்டான் பூங்கா இணைப்பின் ஒரு பகுதி சேதமடைந்தது. தற்போது பூங்கா இணைப்பின் வடபகுதி முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதி தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் Clementi Northarc கட்டுமானத் தளத்திற்கு அருகே இருக்கிறது.சுங்கை உலு பாண்டான் கால்வாய் படுகையிலும் அதன் கரைகளிலும் இருந்த மண் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டதாக தேசியப் பூங்கா கழகம் தெரிவித்தது.

இப்போது கால்வாயின் தென்கரையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள 550 மீட்டர் நீளமுள்ள பகுதி மட்டுமே பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் சரிவான நிலப்பகுதியையும் கட்டுமானத் தளத்திற்கான தடுப்புச் சுவரையும் முழுமையாகச் சீரமைக்கக்கும் என்று கழகம் தெரிவித்தது.