2050-ஆம் ஆண்டிற்குள் கிராஞ்சி நீர் மீட்பு ஆலை, நியூவாட்டர் ஆலை சீரமைக்கப்படும்!

2050-ஆம் ஆண்டிற்குள் கிராஞ்சி நீர் மீட்பு ஆலையும், கிராஞ்சி நியூவாட்டர் ஆலையும் சீரமைக்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் Grace Fu நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

சிங்கப்பூரில் தண்ணீர் தேவையைச் சமாளிக்க சீராமைக்கப்படுவதாக கூறினார்.

சிங்கப்பூர் அன்றாட வாழ்க்கையில் சுமார் 440 மில்லியன் கேலன் தற்போது பயன்படுத்துவதாக கூறினார்.

2065-ஆம் ஆண்டிற்குள் இந்த தேவை இரட்டிப்பாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

குறிப்பாக தெங்கா,சுங்கை காடுட் போன்ற வட்டார பகுதிகளில் வரவிருக்கும் குடியிருப்பு,தொழிலியல் வளர்ச்சித் திட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.