சுருக்கங்களை மறைய செய்யும் கொரியன் கிளாஸ் ஸ்கின் கேர் டிப்ஸ்...!!!

ஆண்கள் பெண்கள் என இரு பாலருக்கும் 40 வயதை கடந்துவிட்டாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கள் முகத்தை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள அதிகம் மெனக்கெடுவார்கள். சிலர் அதுக்காக பிரத்யேக கிரீம்களை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகித்தும் பயன் இருக்காது. இப்படி முகத்தில் தோன்றும் சுருக்கங்களைப் போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை குறிப்புகளைப் பின்பற்றி பயனடையலாம்.
தேவையான பொருட்கள்:-
✨️உளுந்தம் பருப்பு – 50 கிராம்
✨️வசம்பு – ஒரு துண்டு
✨️குப்பைமேனி இலைகள் – கால் கப்
✨️மஞ்சள் தூள் – இரண்டு தேக்கரண்டி
✨️அம்மான் பச்சரிசி இலைகள் – ஒரு கைப்பிடி
செய்முறை விளக்கம்:-
💠 முதலில் 50 கிராம் உளுந்தம் பருப்பை நன்கு காயவைத்து பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைக்கவும்.
💠 அடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு வசம்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
💠 பின்னர் குப்பைமேனி இலைகளை அதேபோல் நன்றாக அரைக்கவும்.
💠 அதன் பிறகு, ஒரு கைப்பிடி உலர்ந்த அம்மான் பச்சரிசி இலைகளை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைக்கவும்.
💠 மஞ்சள் பொடியை அரைத்த பொடியுடன் கலந்து அதை ஒரு ஜாடியில் சேமித்து வைக்கவும்.
💠 பின்னர், ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி இந்தப் பொடியைப் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து, முகத்தில் நன்றாகத் தடவவும்.
💠 20 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
✨️ உளுந்தம் பருப்பு – 25 கிராம்
✨️பாசிப்பருப்பு – 25 கிராம்
✨️மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
✨️வேப்பிலை (உலர்ந்தது) – கால் கப்
செய்முறை விளக்கம்:-
💠 ஒரு கடாயில் உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும். பின்னர் அதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.
💠 உலர்ந்த வேப்ப இலைகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து, ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். அடுத்து, ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
💠 இந்தப் பொடியை தேவையான அளவு எடுத்து, தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
💠 இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு மூன்று முறை முகத்தில் தடவி வந்தால் சுருக்கங்கள் மறைந்து பொலிவாக காட்சியளிக்கும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan