150 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்முறையாக பிறந்துள்ள கிவி குஞ்சுகள்!!

நியூசிலாந்தின் தலைநகரான வெல்லிங்டனில் 100 ஆண்டுகளில் முதல்முறையாக கிவி குஞ்சுகள் பிறந்துள்ளன.

விலங்கு பாதுகாவலர்கள் இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடினர்.

கிவி, நியூசிலாந்தின் தேசிய பறவை ஆகும். மேலும் அழிந்து வரும் இனங்களில் இதுவும் ஒன்று.

தற்போது 26,000 கிவி பறவைகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு காட்டில் 63 கிவி பறவைகளை விடுவித்தனர்.

தற்போது 4 கிவி குஞ்சுகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காட்டின் பிற பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் பாதுகாவலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.