ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டி கவன்ட்ரி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வு…!!

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டி கவன்ட்ரி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வு...!!

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக 12 ஆண்டுகள் பதவி வகித்த தாமஸ் பாச்
பதவி விலகிய பிறகு, சர்வதேச விளையாட்டு அமைப்பில் மிகவும் மதிப்பு மிக்க பதவியான ஒலிம்பிக் தலைவர் பதவிக்கு யார் தகுதி உடையவர் என்று கேள்வி எழுந்துள்ளது.

இதனை அடுத்து ஏழு வேட்பாளர்கள் ஒலிம்பிக் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

அதில் முன்னாள் நீச்சல் வீரரும் ஜிம்பாப்வே விளையாட்டு அமைச்சருமான கிர்ஸ்டி கவன்ட்ரியும் அடங்குவார்.மேலும் உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ, ஐ.ஓ.சி நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் ஜுவான் ஆன்டோனியா சமரஞ்ச் (ஸ்பெயின்) சர்வதேச சைக்கிள் சங்கத் தலைவர் டேவிட் லாப்பரடின்ட்,ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத் தலைவர் மோரினாரி வதானாப்,சர்வதேச ஸ்கை மற்றும் ஸ்னோபோர்டு தலைவர் ஜோஹன் எலியாஸ் மற்றும் ஜோர்டான் இளவரசர் பைசல் பின் ஹுசைன் ஆகிய ஏழு பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஐ.ஓ.சி.யின் 97 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் 49 வாக்குகள் பெற்ற கிறிஸ்டி கவன்ட்ரி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒலிம்பிக் கமிட்டியின் 131 ஆண்டுகால வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்கு உண்டு. உண்மையில், இந்தப் பதவியை வகிக்கும் முதல் ஆப்பிரிக்கர் இவர்தான்.

ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவராக கிறிஸ்டி கவன்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.