டிசம்பர் 16ஆம் தேதி Ecuador இல் கடத்தப்பட்ட கொலின் ஆம்ஸ்ட்ராங் என்ற நபர் டிசம்பர் 20ஆம் தேதி அன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர் ஒரு பிரபல பிரிட்டிஷ் தொழிலதிபர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் இவர் பிரிட்டனின் முன்னாள் கவுரவ தூதராகவும் பணி புரிந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொலினை பணத்திற்காக கடத்தியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கடத்தல் தொடர்பாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும், எட்டு பேர் ஈக்வடாரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.
Ecuador இல் இது போன்ற கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.