சீனாவை புரட்டி போட்ட கெய்மி புயல்!! சிக்கி தவிக்கும் மக்கள்!!

சீனாவை புரட்டி போட்ட கெய்மி புயல்!! சிக்கி தவிக்கும் மக்கள்!!

பெய்ஜிங்: ஜூலை 30 ஆம் தேதி சீனாவின் தெற்கு ஹுனான் மாகாணத்தில் கெய்மி சூறாவளியை தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் 4 பேர் இறந்தனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை பல நாட்களாக பெய்ததால் சீனாவின் தெற்கு மாகாணம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழையினால் சீனாவில் உள்ள பெரிய அணைகள் உடைந்து கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதனால் விளை நிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல்களை உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்த மோசமான வானிலையால் ஜிக்சிங் கவுண்டியில் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தது 1400 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும்,மேலும் 1100 சாலைகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளதாக பீப்பிள்ஸ் டெய்லி இணையதளம் கூறியுள்ளது.

மேலும் பல கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருட்டில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.